December 12, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும்

வியாழக்கிழமை (07) சமர்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும் என தெரியவருகின்றது.

மத்திய நிதி அமைச்சர் Chrystia Freeland வியாழன் மாலை Liberal அரசாங்கத்தின் 2022 வரவு செலவு திட்டத்தை சமர்பிக்கவுள்ளார்.

இதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டினர் எந்தவொரு குடியிருப்பு சொத்துக்களையும் வாங்குவதை சட்டவிரோதமாக்கும் அறிவித்தலும் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2021 Liberal பிரச்சார உறுதிப்பாடுகளில் சிலவற்றை நிறைவேற்ற அரசாங்கம் முன்வந்துள்ளது .

இந்த வரவு செலவு திட்டத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டொலர் புதிய நிதி, வீட்டு வசதி திட்டத்திற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

Scarborough பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment