இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 100, 000க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது.
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser வியாழக்கிழமை (31) இந்த தகவலை வெளியிட்டார்.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 147,000 நிரந்தர வதிவிட குறியிருப்பாளர்களின் விண்ணப்பங்களின் இறுதி முடிவுகளை எடுப்பது என்ற இலக்கை IRCC எனப்படும் கனடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை பிரிவு எட்டியுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.
இது 2021ல் இதே கால எல்லையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை விட இரட்டிப்பானாதாகும்.
இந்த முயற்சிகள் மூலம், இந்த ஆண்டு இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளது.
அதேவேளை 210,000 புதிய கனேடியர்களை உள்வாங்கி, கனடா 2021-2022க்கான குடியுரிமை இலக்குகளை தாண்டியுள்ளது.