December 12, 2024
தேசியம்
செய்திகள்

Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்

புதிய Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும் என Quebec முதல்வர் François Legault எச்சரித்தார்.

Justin Trudeau அரசாங்கத்தை 2025வரை ஆட்சியில் வைத்திருக்கும் Liberal-NDP ஒப்பந்தம் குறித்து Legault செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.

இந்த புதிய கூட்டணி மாகாணங்களுடன், குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்பு குறித்து மோதலைத் தூண்டும் என Legault எச்சரிக்கிறார்.
சுகாதாரப் பாதுகாப்பு போன்ற மாகாண அதிகார வரம்பு விடயங்களில் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என அவர் கூறினார்.
இந்த விடயத்தில் Quebec, Ontario போன்ற மாகாணங்கள் ஒரு நிலையில் உள்ளதாகவும்  Quebec முதல்வர்  கூறினார்.
புதிய ஜனநாயக கட்சியுடனான Liberal கட்சியின் புதிய ஒப்பந்தம் Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் தொடரும் நிலையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

N.L. முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிந்துள்ளார்?

Lankathas Pathmanathan

தடுப்பூசிக்கு இடையிலான 16 வார கால இடைவெளியை குறைக்கும் நிலையில் கனடா: வைத்தியர் Edward Njoo

Gaya Raja

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment