ரஷ்யாவிற்கு எதிரான வர்த்தக நடவடிக்கையை வியாழக்கிழமை (03) கனடா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் பொருளாதார தடைகளையும் துணைப் பிரதமர் Chrystia Freeland அறிவித்தார்.
சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான Interpolலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் கனடா கோருகிறது.
உக்ரேனியர்களுக்கு இந்த நாட்டில் தஞ்சம் புகுவதற்கு கனடா புதிய வழிகளை அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது
தவிரவும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ தளபாட உதவிகளையும் கனடா அனுப்புகிறது
கனடா தொடர்ந்தும் உக்ரேனுக்கு ஆதரவாக செயல்படும் என உக்ரேனிய ஜனாதிபதியுடனான தனது சமீபத்திய உரையாடலில் உறுதியளித்ததாக பிரதமர் Justin Trudeau செய்தியாளர்களிடம் கூறினார்.