December 12, 2024
தேசியம்
செய்திகள்

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

மூன்று வாரங்களாக தொடரும் சட்டவிரோத, ஜனநாயகமற்ற முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடைசி முயற்சியாக அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (17) கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்த விவாதம் இன்று வியாழனன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino புதன்கிழமை மாலை இந்த பிரேரணையை தாக்கல் செய்தார்.

1988ஆம் ஆண்டு அறிமுகமான சட்டத்தை முதல் முறையாக பயன்படுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் முடிவு குறித்த விவாதத்தின் போது பிரதமர் இதனைக் கூறினார்.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மீதான அரசாங்கத்தின் கோரிக்கையை நீதித்துறை மறுஆய்வு செய்ய விரும்புவதாக கனேடிய Civil Liberties சங்கம் அறிவித்தது.

ஏற்கனவே Conservative, Bloc Quebecois கட்சிகள் இந்த பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என கூறியுள்ளன.

அவசரகாலச் சட்ட பயன்படுத்துவதை தனது கட்சி எச்சரிக்கையாகவும் கட்டுப்பாட்டுடனும் ஆதரிக்கிறது என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் வார விடுமுறை முழுவதும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்த பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை இரவு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது.
.
Senate சபையும் வெள்ளிகிழமை முதல் இந்த பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பிக்கவுள்ளது.

Related posts

B.C. மாகாண தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

Lankathas Pathmanathan

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment