COVID தொற்று பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு இந்த வார இறுதியில் Ottawaவை சென்றடையவுள்ளது.
சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி ஆணையை எதிர்க்கும் வகையில் இந்த அணிவகுப்பு முன்னெடுக்கப்படுகிறது.
‘சுதந்திர பேரணி’ என அழைக்கப்படும் இந்த தொடரணியில் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சரக்கு வாகன ஓட்டுனர்கள், பொது சுகாதார ஆணைகளை பரந்த அளவில் எதிர்க்கும் குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் பங்கேற்பாளர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.