Ontario மாகாணம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் Doug Ford, வியாழக்கிழமை (20) இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில வாரங்களில் கட்டுப்பாடுகளை நீக்கும் மாகாணத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக நாளைய அறிவித்தல் வெளியாகவுள்ளது.
January 31 முதல் Ontarioவில் உணவகங்களை 50 சதவீத கொள் திறனுடன் திறக்க அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
Februaryயில் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி March மாதத்தில் முழுமையாக மீண்டும் மாகாணத்தை திறக்க Ford திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.