Ontario 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அதிக தொற்றுகளின் எண்ணிக்கையை வெள்ளிக்கிழமை (31) மீண்டும் பதிவு செய்தது.
குறைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் காலத்தையும் புதிய சோதனை வழிகாட்டுதலையும் Ontario அறிமுகப்படுத்தும் நிலையில் தொற்றுகளின் அதிக எண்ணிக்கை பதிவானது.
Ontarioவில் 16,713 தொற்றுகளும் 15 மரணங்கள் பதிவாகின.
மாகாணத்தில் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கைக்கான ஏழு நாள் சராசரி 11,348 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 4,922 ஆகவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 1,914 ஆகவும் இருந்தது .
வெள்ளிக்கிழமையுடன் Ontarioவின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 756,361 எனவும் இறப்புகளின் எண்ணிக்கையை 10,194 எனவும் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, Ontarioவில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90.8 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியையும் 88.1 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.