தேசியம்
செய்திகள்

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் பல மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்து மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஜனவரி மாதம் Ontarioவின் பாடசாலைகளுக்கான திட்டம் குறித்து  விவாதிக்க முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையை சந்திக்கிறார்.

இந்த வாரம் தனது அமைச்சரவையை சந்தித்து, ஜனவரி மாதம் மாகாணத்தில் பாடசாலைகளை திறக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் விவாதிப்பார் என தெரியவருகின்றது.

இந்த சந்திப்பின் போது வேறு பல தலைப்புகள் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

புதன்கிழமை (29) இந்த சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டதாகவும் அமைச்சரவை கூடுதல் தகவல்களை கருத்தில் கொள்ளும் வகையில் அது வியாழக்கிழமை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரியவருகிறது.

ஜனவரியில் நேரடி  கற்றலுக்கு பாடசாலைகள் திரும்புமா என்பது குறித்த தனது முடிவை இந்த வார இறுதிக்குள் அறிவிப்பதாக செவ்வாய்க்கிழமை Ford கூறியிருந்தார்.

அதேவேளை Newfoundland and Labradorரில் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகள் திறக்கும் என கல்வி அமைச்சர் புதன்கிழமை அறிவித்தார்.

ஆனாலும்  பாடசாலைகள் மெய்நிகர் கற்றல் மூலம் ஆரம்பமாகும் என அறிவித்த அமைச்சர் இந்த முடிவு வாராந்தம் மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

Nova Scotiaவில் உள்ள மாணவர்களுக்கான விடுமுறை இடைவேளை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புவதற்கு முன்பு COVID அறிகுறிகளைக் கண்காணிக்க குடும்பங்களை அனுமதிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் திட்டமிட்டபடி வகுப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என Saskatchewan அரசாங்கம் கூறுகிறது

Quebec அரசாங்கமும் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதை குறைந்தபட்சம் January ஜனவரி 10ஆம் திக்தி  வரை தாமதப்படுத்தியுள்ளது.

British Colombia பாடசாலைக்கு திரும்பும் ஒரு கட்ட அறிவித்தலை வெளியிட்டது.

அதில் அத்தியாவசியத் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே முதல் திட்டமிடப்பட்ட வாரத்திற்கு மீண்டும் வகுப்பில் கற்றலைத் தொடங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Related posts

காசாவில் மூன்று கனடியர்கள் கடத்தல்?

Lankathas Pathmanathan

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan

ஹைட்டி நெருக்கடியை எதிர்கொள்ள கனடா ஆதரிவளிக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment