Torontoவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாடகை வாகன சாரதியின் கொள்ளை விசாரணையில் 26 வயதான ருக்சன் அருள்ராஜா என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் அறிவித்தனர்
இவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர் 20க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்
கடந்த திங்கட்கிழமை (13) கைது செய்யப்பட்ட இவரது இல்லத்தில் தேடுதல் நடவடிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் இதுவரை நீரூபிக்கப்படவில்லை.