தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஐம்பது வயதிற்கு கூடியவர்கள் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசியை பெறமுடியும்

ஐம்பது வயதிற்கு கூடியவர்கள் December மாத நடுப்பகுதியில் மூன்றாவது COVID தடுப்பூசியை பெறமுடியும் என Ontario மாகாணம் வியாழக்கிழமை அறிவித்தது.

Booster shot என பரவலாக அறியப்படும் இந்த மூன்றாவது தடுப்பூசியை இரண்டாவது தடுப்பூசியைப் பெற்ற பிறகு குறைந்தது ஆறு மாதங்கள் காத்திருந்து பெறவேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த வயதிற்குட்பட்ட நபர்கள் December மாதம்13 ஆம் திகதி காலை 8 மணி முதல் இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்ய முடியும்.

அதிக ஆபத்துள்ள நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களையும் வியாழக்கிழமை மாகாணம் வெளியிட்டது.

ஒவ்வாமை உள்ள பெரியவர்களுக்கும் மருத்துவ காரணத்திற்காக mRNA தடுப்பூசியைப் பெற முடியாதவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான Johnson & Johnson  தடுப்பூசி வெள்ளிக்கிழமை  முதல் கிடைக்கும் எனவும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Lankathas Pathmanathan

கனேடிய இராணுவம் எதிர்வரும் நாட்களில் காபூலை விட்டு வெளியேறும்!

Gaya Raja

Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment