December 12, 2024
தேசியம்
செய்திகள்

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரை!

18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் Pfizer தடுப்பூசியை பெற Ontario பரிந்துரைக்கிறது.

Moderna தடுப்பூசிகளை பெற்ற இளம் வயதினருக்கு அரிதான இருதய நோயின் அதிகரிப்பு பதிவான நிலையில் Ontario மாகாண அரசாங்கம் இந்தப் பரிந்துரையை வழங்கியது.

அந்த வயதினரிடையே உள்ள ஆண்களிடையே குறிப்பாக மாரடைப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக மாகாணம் கூறுகிறது.

June மற்றும் August மாதங்களுக்கு இடையில், Modernaவின் இரண்டாவது தடுப்பூசியை தொடர்ந்து 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து 5,000 இல் ஒன்று என மாகாணம் கூறுகிறது.

Pfizer பெற்றவர்களுக்கு இந்த விகிதம் 28,000 இல் ஒன்றாக அறிவிக்கப்படுகின்றது

இதன் பக்க விளைவுகள் அரிதானது என Ontario மாகாணம் கூறுகிறது.

இது ஒரு பரிந்துரை எனவும் மக்கள் விரும்பினால் தொடர்ந்தும் Moderna தடுப்பூசிகளை பெறலாம் என Ontario மாகாணம் தெரிவிக்கின்றது.

Related posts

Albertaவில் அமைச்சரவை மாற்றம் – பதவி இழந்தார் சுகாதார அமைச்சர்!

Gaya Raja

Albertaவை தாக்கிய மிகப்பெரிய நில நடுக்கம்!

Lankathas Pathmanathan

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment