December 12, 2024
தேசியம்
செய்திகள்

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு COVID Booster தடுப்பூசிகள் பரிந்துரை

COVID Booster தடுப்பூசிகளை நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு  தேசிய தடுப்பூசி குழு பரிந்துரைக்கின்றது.
நீண்டகால பராமரிப்பு இல்லங்கள், ஓய்வூதிய இல்லங்களில் வாழும் கனடியர்கள், Booster தடுப்பூசிகளை பெற வேண்டும் என கனடாவின் தடுப்பூசி ஆலோசனை அமைப்பு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

நீண்டகால பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு Booster தடுப்பூசிகளை வழங்குவது பாதுகாப்பை மேம்படுத்தவும், கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலைக்கு காரணியாக உள்ள Delta மாறுபாட்டின்  பரவலைத் தடுக்கவும் உதவும் என தேசிய தடுப்பூசி குழு  கூறுகிறது.

மிதமான மற்றும் கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள கனேடியர்கள் Pfizer அல்லது Moderna போன்ற அங்கீகரிக்கப்பட்ட mRNA தடுப்பூசியின் மூன்றாவது  அளவுகளைப் பெற வேண்டும் என ஆலோசனை குழு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரிந்துரைத்திருந்தது.

Related posts

சீன மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வேண்டும்: Ontario முதல்வர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

Ontarioவில் நாளாந்தம் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம்!

Leave a Comment