Ontarioவில் புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கை பல மாதங்களில் பின் முதல் முறையாக 700க்கு மேல் அதிகரித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை 722 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர்.
June மாதம் 5ஆம் திகதி Ontarioவில் 744 தொற்றுக்கள் பதிவாகியிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்றுக்களில் 22 தொற்றுக்கள் அல்லது 78 சதவிகிதமானவை தடுப்பூசி போடப்படாத அல்லது ஒரு தடுப்பூசி போடப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.
சனிக்கிழமை Ontarioவில் 689 தொற்றுக்கள் பதிவாகின.
Ontarioவில் 82 சதவீதமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையும் 75 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.