தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியின் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கைவிடும் தீர்ப்பை இரத்து செய்ய முயற்சி!

பசுமைக் கட்சியின் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கைவிடும் நடுவரின் தீர்ப்பை இரத்து செய்ய கட்சி முயல்கிறது.

இந்த விடயம் குறித்து கனடாவின் பசுமைக் கட்சி நீதிமன்றத்திற்குச் செல்கிறது.

கட்சியின் தலைவி Annamie Paulலின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு சுயாதீனமான நடுவரின் முடிவை இரத்து செய்ய கட்சி முயற்சிக்கின்றது.

இநத வாரம் தனக்கு எதிராக நடைபெற திட்டமிடப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இரத்துசெய்யப்பட்டதை
திங்கட்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில் Paul உறுதிப்படுத்தினார்.

தற்போதைய கட்சியின் கூட்டாட்சி சபையால் இதேபோன்ற முயற்சிகள் எதுவும் அடுத்த தேர்தல்வரை முன்மொழியப்படாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் ​​பல காரணங்களுக்காக நடுவர் தீர்ப்பில் தவறு செய்ததாக கட்சி இப்போது வாதிடுகிறது.

Related posts

நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

Lankathas Pathmanathan

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan

Toronto சர்வதேச திரைப்பட விழா வியாழன் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment