அண்மைய மோதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களுக்கு கனடா 25 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளது.
பிரதமர் Justin Trudeau இந்த உதவியை வெள்ளிக்கிழமை அறிவித்தார். காசா பகுதியிலும் West Bank பகுதியிலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையிலான சமீபத்திய மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவி அறிவிக்கப்பட்டது.
இந்த நிதி நேரடியாக அனுபவம் வாய்ந்த அமைப்புகளுக்குச் செல்லும் என வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையொன்றில் Trudeau தெரிவித்தார். இது மிகவும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய குடிமக்களுக்கு சமீபத்திய மோதலின் தாக்கங்களை சமாளிக்க உதவும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.