December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Columbiaவில் இன்று தேர்தல்

British Columbia மாகாணத்தில் இன்று (24) தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது.

42ஆவது மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகின்றது. NDP கட்சி John Horgan தலைமையிலும், Liberal கட்சி Andrew Wilkinson தலைமையிலும், பசுமைக் கட்சி Sonia Furstenau தலைமையிலும் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர். கடந்த தேர்தலில் NDP 41, Liberal, பசுமைக் கட்சி 3 என ஆசனங்களை வெற்றிபெற்றிருந்தனர். இம்முறை தேர்தலில் NDP பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய இறுதி கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது.

இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் November மாதத்தின் நடுப்பகுதியிலேயே வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது. COVID தொற்றின் காரணமாக அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தாமதம் குறித்து தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தேர்தல் வாக்களிப்புக்கு 13 நாட்களுக்குப் பின்னரே அஞ்சல் வாக்குகளை எண்ண ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை சுமார் 30 முதல் 35 சதவீதம் வரை அஞ்சல் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. November மாதம் 16ஆம் திகதிக்குள் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

COVID பெரும் தொற்றுக்கு மத்தியில் கனடாவில் நடைபெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். முன்னர் New Brunswickகில் தேர்தல் ஒன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

Gaya Raja

COVID காரணமாக 37 ஆயிரம் பேர் வரை மரணம்

Lankathas Pathmanathan

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

Gaya Raja

Leave a Comment