December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto வழக்கறிஞர் Annamie Paul கனடிய பசுமைக் கட்சியின் தலைவரானார்

கனடாவில் ஒரு பெரிய கூட்டாட்சி கட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பினத் தலைவராகவும் முதல் பெண் யூதத் தலைவராகவும் ஆகியுள்ளார் Annamie Paul.

கனடிய பசுமைக் கட்சியின் (Green Party of Canada) பதிய தலைவராக Torontoவைச் சேர்ந்த வழக்கறிஞர் Annamie Paul தெரிவாகியுள்ளார். Ottawaவில் சனிக்கிழமை (03) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தகுதி வாய்ந்த 34,680 பேரில் 23,877 கட்சி உறுப்பினர்கள் தங்கள் விருப்பு வாக்குகளை வழங்கிய நிலையில் Annamie Paul கட்சியின் புதிய தலைவராகியுள்ளார். இந்தத் தெரிவின் மூலம், Elizabeth May, 13 ஆண்டு காலம் (2006 முதல்  2019 வரை) வகித்துவந்த கட்சித் தலைமை பொறுப்பை Annamie Paul ஏற்றுள்ளார்.  47 வயதான இவர் ஒரு வழக்கறிஞர் மாத்திரமல்லாது ஒரு சர்வதேச விவகார நிபுணருமாவார்.  தலைமைக்கு போட்டியிடுவதற்கு முன்னர் கட்சியின் சர்வதேச விவகார விமர்சகராக இருந்தவர்.

இதுவரை கனடாவில் NDP கட்சியை Alexa McDonough, Audrey McLaughlin, பசுமை கட்சியை Elizabeth May, Progressive Conservative கட்சியை Kim Campbell ஆகிய பெண்கள் தலைமை வகித்துள்ளனர். இவர்கள் வழியில் பசுமைக் கட்சியின் தலைமைக்கான போட்டியில் Annamie Paul எட்டாம் சுற்று வாக்குப் பதிவில் வெற்றியடைந்தார்.  மொத்தம் எட்டு வேட்பாளர்கள் தலைமைக்கான போட்டியில் ஈடுபட்டனர். இவர்களில் Annamie Paul மொத்தம் 12,090 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கனடிய பசுமைக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டிட்டவர்கள்: (மேல்: இடமிருந்து வலம்) Annamie Paul, David Merner, Amita Kuttner, Glen Murray, (கீழ்: இடமிருந்து வலம்) Dimitri Lascaris, Meryam Haddad, Andrew West, Dr. Courtney Howard.

Caribbean பெற்றோருக்கு கனடாவில் பிறந்தவர் Annamie Paul. இவர் ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய இருமொழிகளிலும் சரளமாக பேசும் திறமை கொண்டவர். Princeton பல்கலைக் கழகத்திலும், Ottawa பல்கலைக் கழகத்திலும் பட்டம் பெற்றவர். The Hagueகில் (நெதர்லாந்தின் ஒரு நகரம்) உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆலோசகராகவும், Brusselsசில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடிய காரியாலயத்தில் அரசியல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

கடந்த (2019) பொதுத் தேர்தலில் 1,189,607 கனடியர்கள் பசுமைக் கட்சிக்கு வாக்களித்தனர். இது 6.5 சதவீதமான செல்லுபடியாகும் வாக்குகளாகும். ஆனாலும் நாடாளுமன்றத்தில் கட்சி தனது இருக்கைகளின் எண்ணிக்கையை  ஒன்றால் மாத்திரமே (New Brunswick) அதிகரிக்க முடிந்தது.


கனடிய பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவர் Elizabeth May

Toronto மத்திய தொகுதியில் தற்போது நடைபெறும் இடைத் தேர்தலிலும் Annamie Paul போட்டியிடுகின்றார். Toronto Centre தொகுதிக்கும் இவருக்குமான (இவரது குடும்பத்துக்குமான) தொடர்ப்பு நீண்டது. Annamie Paul பிறந்தது இந்தத் தொகுதியில் தான்.  இவரது தாயார் இந்தத் தொகுதியில் உள்ள பாடசாலையில் கற்பித்தவர். இவரது பாட்டி இந்தத் தொகுதியின் மருத்துவமனை ஒன்றில் முன்னணி சேவை ஊழியராக பணிபுரிந்தவர். இதே தொகுதியில் இவர் கடந்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

கனடாவில் திருடப்பட்ட $3.5 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு!

Lankathas Pathmanathan

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

Lankathas Pathmanathan

Leave a Comment