யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு கனடிய துருப்புக்களை அனுப்புவதை பிரதமர் Justin Trudeau நிராகரிக்கவில்லை.
உக்ரைன மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.
உக்ரைனுக்கு கனடிய துருப்புக்களை அனுப்புவது குறித்து ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் நடைபெற்ற ஒரு கூட்டு ஊடக மாநாட்டில் பதிலளிக்கையில் “அனைத்து தெரிவுகளும் சாத்தியமானவை” என பிரதமர் Justin Trudeau கூறினார்.
இன்றைய நிலையில் முன்னுரிமை யுத்த நிறுத்தத்தை உறுதி செய்வதும், நீடித்த சமாதானத்திற்கான நிலைமைகளை அமைப்பதும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் நடைபெற்ற இந்த பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்றார் .
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.
உக்ரைனின் அமைதி, பாதுகாப்பு குறித்த இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட 13 வெளிநாட்டுத் தலைவர்களில் Justin Trudeauவும் ஒருவராவார்.