Ontario Liberal கட்சி தலைவர் Bonnie Crombie நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதியை அறிவித்துள்ளார்.
Mississauga East-Cooksville தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தை Bonnie Crombie செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார்.
இந்த தொகுதியை Progressive Conservative கட்சியின் முன்னாள் அமைச்சர் Kaleed Rasheed முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார்.
அவர் Greenbelt ஊழல் காரணமாக 2023 இல் கட்சியை விட்டு வெளியேறினார்.
தற்போது சுயேட்சை மாகாண சபை உறுப்பினராக இருக்கும் Kaleed Rasheed, மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் , தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருப்பேன் எனவும் October மாதம் கூறியிருந்தார்.
December 2023 இல் Liberal கட்சியின் தலைமையை Bonnie Crombie வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு மாகாண சபையில் ஒரு ஆசனம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Mississauga நகர் முதல்வராக இருந்த முன்னர் Mississauga-Streetsville தொகுதியின் நகரசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதிவு வகித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.