Liberal அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தொடர்ந்தும் தயாராக உள்ளதாக NDP தலைவர் தெரிவித்தார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய தலைவருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் புதிய கட்சியின் தலைவராக யாரும் இருந்தாலும் Liberal கட்சியை ஆட்சியில் இருந்து விலக்க வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக Jagmeet Singh கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வரி குறித்த தனது அச்சுறுத்தல்களில் இருந்து பின்வாங்காத நிலையில் ஒரு வர்த்தகப் போருக்கு கனடா தயாராக வேண்டும் எனவும் Jagmeet Singh தெரிவித்தார்.
தேர்தல் ஒன்றை தவிர்ப்பதற்காக NDP கட்சியுடன் ஒரு புதிய உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த கருத்தை NDP தலைவர் வெளியிட்டார்.
மாறிவரும் அரசியல் இயக்கவியலின் மத்தியில் அடுத்த தேர்தல் புதிய ஜனநாயகக் கட்சிக்கும், Conservative கட்சிக்கும் இடையேயான தேர்வாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு ஆதரவாக NDP செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த September மாதம் Jagmeet Singh அறிவித்தார்.