முதற்குடி குழந்தைகள் நல பாகுபாடுகளுக்கு மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
முதற்குடி குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
மன்னிப்புக்கான அரசாங்கத்தின் திட்டத்தை முதற்குடிகள் சட்டசபை தேசிய தலைவருக்கு திங்கட்கிழமை (17) எழுதிய கடிதத்தில் Justin Trudeau உறுதிப்படுத்தினார்.
“கனடிய அரசாங்கத்தின் பாரபட்சமான நடத்தைக்காக பகிரங்க மன்னிப்புக் கோருவதை உறுதி செய்கிறேன்” என Justin Trudeau அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார்.
சுதேச சேவைகள் அமைச்சர் Patty Hajdu, நீதி அமைச்சர் Arif Virani ஆகியோர் இந்த மன்னிப்புக் கோரிக்கையின் உள்ளடக்கம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.