தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

தெற்கு Ontario முழுவதும் எரிபொருளின் விலை மீண்டும் உயரவுள்ளது.

சனிக்கிழமையன்று (16) தெற்கு Ontarioவின் பெரும்பகுதி முழுவதும் எரிபொருளின் விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை முதல் லிட்டருக்கு 11 சதத்தினால் உயர்ந்த எரிபொருளின் விலை, மீண்டும் சனிக்கிழமை மேலும் 12 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய வெள்ளியன்று லிட்டருக்கு 173.9 சதமாக விற்பனையான எரிபொருள், சனிக்கிழமை 1.859 சதமாக அதிகரிக்கவுள்ளது.

72 மணி நேரத்தில் லிட்டருக்கு 23 சதத்தினால் எரிபொருளின் விலை அதிகரிப்பது முன்னைப்போதும் இல்லாத விலை அதிகரிப்பாகும்.

கோடையில், Ontarioவில் எரிபொருள் லிட்டருக்கு 2 டொலர் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல உரையாடலில் பங்கேற்ற உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

Lankathas Pathmanathan

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

Leave a Comment