தேசியம்
கட்டுரைகள்கனடா மூர்த்திகனேடிய தேர்தல் 2021

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தலையொட்டி, கனடாவின் பெரும் கட்சித்தலைவர்களிற்கிடையேயான “தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம்” பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்து முடிந்தது. இவற்றில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் வாக்குக்களை பறித்தெடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால் எந்த தலைவரும் ஆங்கில விவாத வெற்றியின் உச்சத்தை அடைந்ததாக தெரியவில்லை. புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர் Jagmeet Singh, அழகழகாக தமது கொள்கைளை எடுத்து விட்டு ஆலாபித்தாலும் இந்த தேர்தலில் புதிய ஜனநாயகமும் – பசுமையும் வேலைக்காகாது என்பது சிறிது நேரத்திலேயே புரிந்துவிட்டது.

பாவம் Justin Trudeau! விவாத மேடையில் அவர் தடக்கி விழாத குறையாக, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவருக்கு கால் தடம் போட்டார்கள். கடந்த தேர்தலில் உறுதியளித்தது போல அவரும் அவரது அரசும் நடக்கவில்லை என்பதுதான் பலரதும் குற்றச்சாட்டு. COVID நான்காவது அலையடிக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை திடீரெனக் கலைத்து ஒரு தேர்தலை நடத்த Trudeau சென்றதையும் ஏனைய தலைவர்கள் விரும்பவில்லை. அனைவரும் தன்னை கும்முகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட காரணத்தால், Trudeauவிடம் பற்றிக் கொண்ட “போல” உற்சாகம் எதிர்மறையாகத்தான் சென்று முடிந்தது. பல இடங்களில் Trudeau பேசு வதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. COVID தொற்றின் ஆரம்பத்தில் தானும் தனது அரசும் கனடிய மக்களுக்கு உதவியாக நின்றதைச் சொல்லும்போது மட்டும்தான் Trudeau உற்சாகமாகதென்பட்டார்.

Conservative தலைவர் Erin O’Toole புதியவராக இருப்பதால் அவர் தனது கொள்கைகளை சொல்லும்போது நம்பிக்கை வருகிறது. – Trudeau தனது கொள்கைகளை சொல்லும்போது நம்பிக்கை வராமல் இருந்ததற்கு அவர் பழையவராகிவிட்டதும் ஒரு காரணமாகும் – ஒரு கட்டத்தில் Trudeauவைப் பார்த்து Conservative தலைவர் “Canada borrows $424 million each day and it comes with a cost” என்று குற்றம் சாட்டினார் – ஒரு நாளைக்கு 424 மில்லியன் டொலர்களா…? இது தொடர்ந்தால் கனடா என்னவாகுமோ என்று எனக்கு பயமாக இருந்தது.

O’Toole கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு மந்தமான தலைவர் போல மற்றவர்களுக்குத் தோற்றம் கொடுத்திருந்தாலும் – தற்போது மிகவும் முதிர்ந்த தலைவர் போல நின்று அதிகம் துள்ளியடிக்காமல் புன்சிரிப்புடன் அமைதியாக விவாதித்தார்  பதிலுறுத்தார்.

இம்முறை கட்சித் தலைவர்கள் விவாதத்தில் O’Toole தான் வெற்றியாளர் என்பதை கனடா மைய ஊடகங்கள் ஒத்துக் கொள்கின்றன.பசுமை கட்சியின் தலைவர் (or தலைவி?) Annamie Paul தான் இந்த விவாதத்தில் உண்மையான வெற்றியாளர் – ஆனாலும் தனது சொந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதே Paul எதிர்கொள்ளும் சவாலாக இருக்கும் நிலையில் விவாதத்தில் வெற்றி பெற்று அடையப் போவது எதுவுமில்லை – she had less to lose · so little to worry · in turn little to fear. Trudeau ஒரு பெண்நிலைவாதி அல்லர் என்பதை புரிய வைக்க சிரமப்பட்டார் Paul. “I do not believe that Mr. Trudeau is a real feminist. A feminist doesn’t continue to push strong women out of his party” என்றார் Paul. பதிலுக்கு கடுப்பான Trudeau “I won’t take lessons in caucus management from you” என்று திருப்பி விட்டார்.

சந்தடி சாக்கில் Jane Philpott, Jody Wilson-Raybould, Celina Caesar-Chavannes என Trudeau பின்தள்ளிய பெண் அரசியல் தலைமைகளையும் குறிப்பிட Paul தவறவில்லை. கனடாவை வழிநடத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் ஒரு பிரிவினைவாதக் கட்சியின் தலைவர் (Bloc Québécois கட்சித் தலைவர் Yves-Francois Blanchet) கனடாவை யார் வழிநடத்த வேண்டும் என்ற விவாதத்தில் ஏன் பங்கேற்கிறார் என்பது எனக்கு உண்மையில் புரியவில்லை. ஆனாலும் Quebec மாகாணத்தில் மாத்திரம் வேட்பாளர்களை களம் இறக்கும் Blanchetரைத்தான் இந்த விவாதத்தின்போது எனக்குப் பிடித்திருந்தது. Blanchet எதைப்பற்றிப் பேசினாலும் அதனுள் Quebecகின் சுயநிர்ணய உரிமையைக் கலந்து பேசினார். Quebec  மக்களின் உரிமைதான் முதன்மையானது கனடா அதன் பின்னர்தான்  என்பதை தைரியமாக அவர் வெளிப்படுத்திய பாங்கு உன்னதமானது அவரை இனிவரும்காலத்தில்Quebec  அமிர்தலிங்கம் என்று அழைக்க எண்ணியுள்ளேன் விவாதம் தொலைக்காட்சியில் ஒரு புறம் நடக்க மறுபுறம் Twitter தளத்தின் விவாதம் குறித்தவிவாதம் ஒன்று அரங்கேறி முடிந்தது. அதில் பலரும் விவாதம் வடிவமைக்கப்பட்ட விதம் குறித்தும் விவாதத்தை வழிநடத்தியவர் குறித்தும் விவாதித்து தள்ளினார்கள். ஆங்கில விவாதத்தில் யார் வென்றுள்ளனர் என்பது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு கனேடியர்களுக்குத் தெரியாது என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு .

விவாதத்தைப் பார்த்த பங்கேற்பாளர்களில் சுமார் 32 சதவீதம் பேர், யார் வெற்றி பெற்றார்கள் எனத் தெரியவில்லை என கூறினர். வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தவர்களில், O ‘Toole 21 சதவிகிதத்துடன் முதலிடமும், Trudeau 18 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும் பிடித்தனர். எனது இறுதி அபிப்பிராயம்: Paul மற்றும் Singh சிறந்த விவாதக்காரர்களாக்கப் பட்டார்கள் – ஆனாலும் அவர்கள் கனடாவின் அடுத்த அரசாங்கத்தை வெல்லப் போவதில்லை என்பது அவர்களுக்கே தெரியும் – அதனால் அவர்களை தவிர்த்து விடலாம். O’Toole நல்ல ஒரு தெரிவாக (கவர்ச்சியாக இல்லாவிட்டாலும்) தெரிந்தார். Trudeau புதிய ஆதரவு எதனையும் வெல்லத் தவறிவிட்டார். விவாத முடிவுகள் தேர்தல் முடிவுகளாக மாறவேண்டும் என்ற அவசியமில்லை!

கனடா மூர்த்தி

Related posts

தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனடியர்கள் தெளிவாக இருக்க வேண்டும்: Trudeau

Gaya Raja

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja

Leave a Comment