தேசியம்
செய்திகள்

Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த B.C. முதல்வர்

Carbon வரி உயர்வை எதிர்க்கும் நகர்வில் கலந்து கொள்ளுமாறு British Columbia மாகாண முதல்வரை கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை British Columbia மாகாண முதல்வர் David Ebyக்கு வெள்ளிக்கிழமை (15) அனுப்பியிருந்தார்.

ஆனாலும் Carbon வரி உயர்வை நிறுத்த உதவுமாறு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை British Columbia மாகாண முதல்வர் நிராகரித்துள்ளார்.

April 1ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள Carbon வரி உயர்வை எதிர்க்கும் ஏழு முதல்வர்களுடம் இணையுமாறு Pierre Poilievre  இந்த கடிதத்தில் கோரியிருந்தார்.

ஆனாலும் இந்த கோரிக்கையை ஒரு பிரச்சார உத்தி என David Eby விமர்சித்தார்.

Alberta, Saskatchewan, Ontario, New Brunswick, Nova Scotia, Prince Edward Island, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் April 1 ஆம் திகதி உயர்த்தப்படவுள்ள Carbon வரி அதிகரிப்பை கைவிடுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளனர்.

Related posts

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் சந்தர்ப்பத்தை மீண்டும் பெறும் Toronto Maple Leafs

ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் குறித்த இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment