தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் தேசிய அவைக்கு எதிராக கனடியத் தமிழர் பேரவை அவதூறு வழக்கு

கனடிய தமிழர் தேசிய அவை  (NCCT),  NCCT ஊடகப் பேச்சாளர் தேவா சபாபதி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர கனடியத் தமிழர் பேரவை (CTC) உத்தேசித்துள்ளது.

கனடியத் தமிழர் பேரவை இந்த தகவலை வெளியிட்டது.

இந்த சட்ட நடவடிக்கை NCCT, அதன் ஊடகப் பேச்சாளரினால் பரப்பப்பட்ட தவறான, ஆதாரமற்ற அறிக்கைகளின் அடிப்படையில் தொடரப்படவுள்ளதாக CTC கூறுகிறது.

இவ்வாறு பிழையான ஆதாரமற்ற தகவல்களை கனடியத் தமிழர் பேரவையின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் NCCT வேண்டுமென்றே பரப்புவதாக நம்புவதாக CTC கூறுகிறது.

இது தொடர்பாக CTC இன் வழக்கறிஞரால் விளக்கம் கோரி  அனுப்பப்பட்ட கடிதத்திற்கு NCCT பதிலளிக்கவில்லை என கனடியத் தமிழர் பேரவை தெரிவிக்கிறது.

Related posts

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற Edmonton Oilers

Pickering நகரில் கத்தியால் குத்தப்பட்ட பெண் – 13 வயது ஆண் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment