December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதிய வாடகை வீடுகளுக்கான GSTயை நீக்கும் அரசாங்கம்

புதிய வாடகை அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு GST வரியை கனடிய அரசாங்கம் நீக்குகிறது.

பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை London Ontarioவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வியாழக்கிழமை (14) வெளியிட்டார்.

இந்த மாற்றம், வீடு கட்டுபவர்களுக்கான செலவீனங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Liberal கட்சி எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக இந்த அறிவித்தல் வெளியானது.

மாகாணங்களையும் இது போன்ற நகர்வை முன்னெடுக்க ஊக்குவிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான செய்தியாளர் மாநாட்டில் நிதி அமைச்சர் Chrystia Freeland, வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser, தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne ஆகியோரும் பங்கேற்றனர்.

Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் 158 பேர் கலந்து கொள்ளும் மூன்று நாள் சந்திப்பு London Ontarioவில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகின்றன.

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட (Housing Accelerator Fund – HAF) நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தத்தை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (13) அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

தேவை ஏற்பட்டால் மேலும் வட்டி வீத அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி பரிசீலிக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment