December 12, 2024
தேசியம்
செய்திகள்

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

4,608 புதிய தொற்றுக்களை வெள்ளியன்று சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

மீண்டும் ஒருமுறை Albertaவில் ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

Saskatchewanனில் இந்த ஆண்டின் அதிகூடிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

British Colombiaவில் February மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் பதிவாகின.

Albertaவில் 1,473 தொற்றுகளும் 10 மரணங்களும் பதிவாகின.

Quebecகிலும் Ontarioகிலும் British Colombiaவிலும் தலா 800க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.

Quebecகில் 879 தொற்றுகளையும் 4 மரணங்களையும், Ontarioவில் 848 தொற்றுகளையும் 11 மரணங்களையும், British Colombiaவில் 820 தொற்றுகளையும் 9 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Saskatchewanனில் 432 தொற்றுக்களும் ஒரு மரணமும், Manitobaவில் 105 தொற்றுக்களும் ஒரு மரணமும் பதிவாகின.

தவிரவும் New Brunswickகில் 24, Newfoundland and Labradorரில் 12, Nova Scotiaவில் 11, Prince Edward Islandடில் 4 என தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

சீனாவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment