Ontarioவில் அமுலில் உள்ள வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
June மாதம் 2ஆம் திகதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் Doug Ford வியாழக்கிழமை அறிவித்தார். இரண்டு வாரங்களுக்கு பின்னர் முதல் தடவையாக ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். மாகாணத்தை மீண்டும் திறக்க விரைந்து செயல்பட முடியாது என இந்த செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் Ford கூறினார்.
தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை மூன்று ஆயிரத்திற்கும் குறைவான தொற்றுக்கள் Ontarioவில் பதிவாகின. 2,759 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். வியாழக்கிழமை வரை 55 இலட்சம் பேர் ஒரு தடுப்பூசியை Ontarioவில் பெற்றுள்ளனர்.
4 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் குறைந்தது 65 சதவீதமானவர்களுக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசியை வழங்க விரும்புவதாக Ontario மாகாண அரசங்கம் தெரிவித்தது.