தேசியம்

Liberal கட்சியின் வேட்பாளராகும் முன்னாள் காவல்துறையின் பிரதி தலைவர்!

Markham-Unionville தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக Toronto காவல்துறையின் முன்னாள் பிரதி காவல்துறை அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் இருந்து விலகிய Paul Chiang-க்கு பதிலாக Peter Yuen வேட்பாளராக Liberal கட்சியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Toronto காவல்துறை சேவையில் Peter Yuen 34 ஆண்டுகள் பணியாற்றினார்.
அண்மையில் Ontario மாகாணத் தேர்தலில் அவர் Liberal கட்சி வேட்பாளராக Scarborough–Agincourt தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தேர்தலில் இருந்து விலகும் முடிவை Markham-Unionville தொகுதியில் Liberal கட்சி வேட்பாளர் Paul Chiang கடந்த வாரம் எடுத்தார்.
Conservative கட்சி வேட்பாளர் Joe Tay, Toronto-வில் உள்ள சீன தூதரகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என Paul Chiang பரிந்துரைத்திருந்தார்.
இந்தக் கருத்துக்காக அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தன.
இந்த நிலையில் Markham-Unionville தொகுதியின்  வேட்பாளராக தொடர்ந்து இருக்கப் போவதில்லை என ஒரு அறிக்கையில் Paul Chiang தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது.
மூன்று வாரங்களில் கனடியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.