Brampton நகர தமிழினப் படுகொலை நினைவுச்சின்ன திறப்பு விழா
தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் Ontario மாகாணத்தின் Brampton நகரில் திறந்து வைக்கப்படவுள்ளது. Chinguacousy பூங்காவில் May மாதம் 10-ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed