ஐயப்பன் இந்து ஆலயம் முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் பிரதிவாதிக்கு சாதகமாக தீர்ப்பு!

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம் (Ontario ஸ்ரீ ஐயப்ப சமாஜம் – Sri Ayyappa Samajam of Ontario), கார்த்திக் நந்தகுமாருக்கு எதிராக முன்னெடுத்த சட்ட நடவடிக்கையில் கார்த்திக் நந்தகுமாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Ontario மாகாண உயர்நீதிமன்றம் திங்கட்கிழமை (29) இந்த தீர்ப்பை  வழங்கியது. இதில் தனக்கு எதிரான  ஐயப்பன் இந்து ஆலயத்தின் சட்ட நடவடிக்கையை நிராகரிக்க பிரதிவாதி கார்த்திக் நந்தகுமார் கோரியிருந்தார். 2021ஆம் ஆண்டு November மாதம் 25ஆம் திகதி ஐயப்பன் இந்து ஆலயத்தில் ஆரம்பமான சம்பவம் ஒன்றுடன் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தனது கருத்துப்படி, இந்த சட்ட நடவடிக்கை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வழக்கை விசாரித்த Ontario மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி JT Akbarali தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த வழக்கில் பிரதிவாதி, பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை  நிரூபித்துள்ளார் எனவும் நீதிபதி கூறினார். இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி கார்த்திக் நந்தகுமாரின் செலவை ($73,769.12) முழு இழப்பீட்டுத் தொகையாக முப்பது நாட்களுக்குள் ஐயப்பன் இந்து ஆலயம் செலுத்த வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி JT Akbarali கூறியுள்ளார். Premium WordPress Themes DownloadDownload WordPress ThemesDownload Premium WordPress Themes FreeFree Download WordPress Themesfree download udemy paid coursedownload samsung firmwareDownload Premium WordPress Themes Freeudemy paid course free download