நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் தன்னைத் தானே தடுத்து வைத்திருந்த நபரை சனிக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டார் எனவும் இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து Ottawa காவல்துறையின் குற்றவியல் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது என தெரியவருகிறது.
குறிப்பிட்ட நபர் ஆயுதம் ஏந்தி இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல் விடுத்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாடாளுமன்ற கிழக்கு கட்டிடத்தில் மேல்சபை உறுப்பினர்கள், அவர்களின் ஊழியர்களின் அலுவலகங்கள் உள்ளன.
பொதுத் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.